இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பரிதாப சாவு.
திருச்சியில் நடந்த சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
திருச்சி, சுப்பிரமணியபுரம், பாண்டியன் தெருவை சேர்ந்தவர் லான்சிரவுஸ் (வயது 60). கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று திங்கள்கிழமை தனது நண்பருடன், (திருவெறும்பூர் அருகே சர்கார்பாளையம் } கல்லணை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சர்க்கார் பாளையம் பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த அவர் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.