திருச்சி தக்காளி வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
திருச்சி கீழ தேவதானம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 50) இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று தக்காளி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் பொழுது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் செல்வத்திடம் ரூபாய் 500 பறித்துக் கொண்டு ஓடவிட்டார்.
இது குறித்து செல்வம் கோட்டை போலீஸ் புகார் கொடுத்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்துக்கிடமான ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் பெயர் மோகன்ராஜ் (வயது 23)அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர்தான் செல்வத்திடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றார் என தெரியவந்தது.
இதையடுத்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜ்யை கைது செய்துள்ளனர்.