2024 ல் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை இந்திய ஜனநாயக கட்சி தீர்மானிக்கும் ரவி பச்சமுத்து திருச்சியில் பேச்சு.
2024ல் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை இந்திய ஜனநாயக கட்சி தீர்மானிக்கும்.
நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் ரவி பச்சமுத்து பேச்சு
இந்திய ஜனநாயக கட்சி தகவல் தொழில் நுட்ப அணியின் துவக்க விழா திருச்சியில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தலைமையில் நடந்தது.
மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டாக்டர் ரமேஷ் வரவேற்று பேசினார்.மாநில பொருளாளர் ராஜன் மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன்,
மாநில இணை பொதுச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின், மாநில , இளைஞர் அணி செயலாளர் பி.ஆர்.சுரேஷ், வரதராஜன்,தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் ராகுல் குமார், நாராயணசாமி,
அருள்ராஜ், சரவணன்மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் நவீன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தகவல் தொழில் நுட்ப அணியை தொடங்கி வைத்து இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து பேசியதாவது:-
எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும் முக்கியமில்லை. நல்ல உள்ளங்களை சம்பாதிப்பது மட்டும்தான் இந்திய ஜனநாயக கட்சியின் ஒரே குறிக்கோள்.
2024 யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை இந்திய ஜனநாயக கட்சி தீர்மானிக்கும்.
கண்டிப்பாக வரும் தேர்தலில் எதிர்க்கட்சியாக இந்திய ஜனநாயக கட்சி இருக்கும்.
இந்தியாவே நல்வழிப்படுத்த வேந்தரை தவிர வேறு யாராலும் முடியாது.
அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதே இந்திய ஜனநாயக கட்சியின் ஒரே குறிக்கோள்.
மக்களுக்கு நல்லதை சொல்வதே இந்திய ஜனநாயக கட்சி.
இந்திய ஜனநாயக கட்சி தொண்டர்கள் மக்களுக்கு பொது சேவையில் ஈடுபட வேண்டும்.
தைரியம் இருந்தால் 2024 இந்திய ஜனநாயக கட்சி கிட்ட வந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.