திருச்சி விமான நிலையத்தில் ரூ.44.17
லட்சம் மதிப்பிலான தங்கத்தை நூதன முறையில் கடத்தி வந்த பெண் கைது.
சார்ஜாவிலிருந்து மின்சாதனத்துக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட ரூ. 44.17 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சார்ஜாவிலிருந்து வெள்ளிக்கிழமை காலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும், திருச்சி விமான நிலைய சுங்கத்துறை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடைமைகளில், இடியாப்பம் தயாரிக்கும் மின்சாதனத்தின் உள்பகுதியில், உருளை வடிவில் 811 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதன் மதிப்பு ரூ. 44.17 லட்சமாகும். தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.