திருச்சி 24 வது வார்டின் அவலம்.
திருச்சி புத்தூர் மந்தை பகுதியில் சில மாதங்களாக ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது.
இப்பகுதியில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சக்கடைகள் பணிகள் முடிந்து சாலைகள் சீரமைக்கப்படும் என எண்ணி இருந்த நிலையில் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
பல நேரம் குடிநீர் குழாய்களில் பிளவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி சாலைகளில் வெள்ளம் போல் ஓடி குடிநீர் வீணாகி வருகிறது.
இது உள்ள முக்கிய பிரச்சனை என்னவென்றால் இந்த புத்தூர் மந்தையில் உள்ள ரேஷன் கடையை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது.
தற்போது சாலைகள் குண்டும் குழியமாக உள்ளதால் ரேஷன் கடைக்கு வரும் பொருட்களை இறக்க முடியாமல் ரேஷன் லாரிகள் திரும்பி விடுவதால் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் யாரும் ரேசன் பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் இப்பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் சோபியா விமலா ராணி உடனடியாக சாலைகளை சரிசெய்து ரேஷன் பொருட்கள் (பொருட்களாவது) வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என புத்தூர் மந்தைப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.