Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா ?ராகுல் டிராவிட் பேட்டி.

0

 

3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேச அணி 2-0 என தொடரை வென்றது.

இந்த நிலையில் , வங்காளதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் , குல்தீப் சன் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர் என இந்திய அணியின் பயிற்சியாளரை ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இது குறித்து டிராவிட் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது ;

ஒரு சில வீரர்கள் காயத்தால் அவதிப்படுகிறர்கள் ., அது எங்களுக்கு உகந்ததல்ல மற்றும் எளிதானது அல்ல. ரோஹித் சர்மா ,தீபக் சாஹர் நிச்சயமாக அடுத்த போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
குல்தீப் சென் ,தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் .
ரோஹித் மீண்டும் மும்பைக்கு சென்று , நிபுணருடன் கலந்தாலோசித்து, டெஸ்ட் தொடரில் விளையாட முடியுமா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவார். எனக்கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.