திருச்சியில் 8ம் வகுப்பு மாணவன் திடீர் மாயம்.
திருச்சி பொன்மலைப்பட்டி உடையார் தெருவை சேர்ந்தவர் பிலவேந்திரன். இவரது மகன் யூஜின் நிதிஷ் (வயது 14). திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று பள்ளிக்கு விடுமுறை எடுத்து உள்ளான். இந்நிலையில் வீட்டை விட்டு சென்ற அவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை பிலவேந்திரன் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார் .
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிந்து மாயமான மாணவன் யூஜின் நிதிசை தேடி வருகிறார்.