வயிற்று வலி தொல்லையால் விஷம் அருந்தி இளம்பெண் தற்கொலை.
திருச்சியில் விஷம் உட்கொண்டு சிகிச்சை பெற்ற இளம்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி சோமரசம்பேட்டை அருகேயுள்ள பள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(30). இவர் அப்பகுதியில் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவருடைய மனைவி சங்கீதா(வயது 27). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சங்கீதாவிற்கு நீண்ட காலமாக வயிற்று வலி இருந்துள்ளது. இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லையாம்.
கடந்த நவம்பர் 17 ஆம் தேதி அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது, வலி தாள முடியாத சங்கீதா விரக்தியில் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். பின்னர் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர் சிகிச்சையிலிருந்த சங்கீதா, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரழந்தார்.
இது தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.