திருச்சியில் பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரனை விடுதலை செய்யக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம். 333 பேர் கைது.
திருச்சி இன்று தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்
333 பேர் கைது.
திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் மதுவுடன் கூடிய நடன விடுதிக்கு அனுமதி அளிக்கப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை அவதூறாக பேசியதாக மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட 9 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்களை விடுவிக்க கோரி இன்று திருச்சி மாநகரில் 10 இடங்களில் மண்டல் வாரியாக பாஜக நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 59 பெண்கள் உட்பட 333 பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.