திருச்சி பாலக்கரை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது.
திருச்சி பாலக்கரை கூனி பஜார், பக்காளி தெரு அருகில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து பாலக்கரை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் கஞ்சா விற்றதாக பாலக்கரை கூனி பஜாரை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (வயது 26 ) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது .