புள்ளம்பாடி அருகே ரூ.248.59 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம்.அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
புள்ளம்பாடி அருகே
ரு 248.59 கோடியில்
கூட்டுக் குடிநீர் திட்டம்
அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், ரெட்டிமாங்குடி ஊராட்சியில், லால்குடி மற்றும் புள்ளம்பாடி ஒன்றியங்களைச் சார்ந்த 109 ஊரக குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கும் வகையில் ரூபாய் 248.59 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய் 36.84 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் முரளி உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.