முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்தி அன்னதானம் செய்திட மாவட்ட செயலாளர் குமார் வேண்டுகோள்.
திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அஇஅதிமுக பொதுச்செயலாளருமாம், வருங்கால தமிழக முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், வாழும் கரிகால்சோழனுமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க..,
என்றும் தமிழக மக்களின் முதல்வர் இதய தெய்வம் அம்மா அவர்களின் 6.ஆம் ஆண்டு நினைவு நாளான (5.12.2022- திங்கள் கிழமை) அன்று கழகத்தின் அனைத்து நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும்.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி கழகம், கிளைக் கழகம், வட்ட கழகம் தோறும் அம்மா அவர்களின் திருஉருவ படங்களை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அன்னதானம் மற்றும் நினைவஞ்சலி நிழ்ச்சியினை நடத்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என ப.குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.