திருச்சி விமான நிலையம் அருகே பணிக்குச் சென்ற முதியவர் திடீர் மாயம்.
திருச்சி விமான நிலையம் புதுக்கோட்டை மெயின் ரோடு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். (வயது 72). இவர் சம்பவத்தன்று விமான நிலையம் அருகே வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது மனைவி செல்வி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.