கும்பகோணத்தான் சாலையில் தற்காலிக காவல் நிலையம். இரவு முழுவதும் ரோந்து பணி.திருச்சி கமிஷனருக்கு பாரத முன்னேற்றக் கழக நிறுவனர் பாரத ராஜா கடிதம்.
காவிரி பாலம் அடைப்பு.மக்கள் பயன்படுத்திட உள்ள கும்பகோணத்தான் சாலையில் தற்காலிக காவல் நிலையம்-இரவு முழுவதும் ரோந்து பணி.
காவல் ஆணையர் கார்த்திகேயனுக்கு
பாரத முன்னேற்றக் கழகம் வேண்டுகோள்
…….
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயனுக்கு யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது……
மாநகரத்தில் லாட்டரி ,கஞ்சா போன்ற சட்ட விரோத பொருட்களை விற்பதை தடுப்பதிலும்,
ரவுடியீசத்தினை ஒழிப்பதிலும் தாங்கள் முனைப்பு காட்டி வருவது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது.
திருச்சியையும் ஸ்ரீரங்கத்தினையும் இணைக்கும் பழமை வாய்ந்த காவிரி பாலம் பழுதடைந்த காரணத்தினால் பராமரிப்பு மற்றும் பேட்ஜ் பணிகள் நடைபெற்று வருகின்றது.
அடைக்கப்பட்ட நாள் முதல் இரண்டு சக்கர வாகனம் மட்டும் காவிரி பாலத்தில். அனுமதிக்கப்பட்டது.
துரிதகதியில் வேலை நடைபெற வேண்டும் என்பதற்காக பாலம் முழுமையாக அடைக்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.
இதனால் இனி ஸ்ரீரங்கம் சென்று வரும் வாகன ஓட்டிகள் அனைவரும் கும்பகோணத்தான் சாலையை பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயம்
இந்த கும்பகோணத்தான் சாலையின் பெரும்பாலான இடங்கள் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியாகும்.மேலும் தெரு விளக்குகள் அதிகம் எரியாததால் வழிப்பறிகள் அதிகம் நடக்க வாய்ப்புள்ள அச்சமிகுந்த குறுகிய வழியாகும்.
ஆகவே இரவுப்பகல் பாராது மக்கள் அச்சமின்றி இந்த சாலையை பயன்படுத்திடும் சூழல் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அப்பகுதியிலேயே தற்காலிக காவல் நிலையம் ஒன்று அமைத்து இரவு முழுவதும் அதிகளவிலான காவல்துறையினரை பைபாஸ் முதல் திருவானைக்கோவில் பாலம் வரை தொடர்ந்து ரோந்துப்பணியில் ஈடுபடுத்தி மக்கள் அச்சமின்றி கும்பகோணத்தான் சாலையில் பயணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றோம்
அது மட்டுமின்றி மாவட்ட, மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் பரிந்துரைத்து கும்பகோணத்தான் சாலையில் முழுமையாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்திடவும்,நாய்களை கட்டுப்படுத்திடவும் ஆவன செய்துதவ வேண்டுகின்றோம்.
இவ்வாறு தமது கடிதத்தில் பாரதராஜா யாதவ் கூறியுள்ளார்