தேசிய பத்திரிக்கையாளர் தினம் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து.
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது .
1966 ம் ஆண்டு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தோற்றுவிக்கப்பட்ட தினமான நவம்பர் 16 தேசிய பத்திரிகைகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு தேசிய பத்திரிகையாளர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது .
நாடு முழுவதும் செய்திகளை சேகரிக்க உயிரை பணிய வைத்து இரவும் பகலும் பாராமல் தொடர்ந்து உழைத்து வரும் பத்திரிக்கையாளர்களை சுதந்திரமாக செயல் பட விடாமல் ஒருமையில் – மிரட்டல் தோனியில் பேசுவது மற்றும் தாக்குதல் போன்ற சம்பவஙகள் கண்டிக்க தக்க தாகும் .
பத்திரிக்கையாளர்களை மிரட்டல் தோனியில் பேசுவது மற்றும் தாக்குதல் போன்ற ஏதேனும் சம்பவங்கள் நடை பெற்றால் அதில் சம்பந்த பட்டவர்கள் மீது எந்த வித பாரம் பட்சம் பார்க்காமல் சட்ட ரிதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம்.
ஆகவே இனி வரும் காலங்களில் பத்திரிக்கையாளர்கள் எந்த வித அச்சம் இல்லாமல் சுதந்திரமாக செய்திகளை சேகரிக்க தகுந்த பாதுகாப்பு அளித்திட மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் .
உண்மையை நிலைநாட்டி தேசத்தை பாதுகாக்க அயராமல் உழைத்து கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள் அணைவருக்கும் தேசிய பத்திரிக்கையாளர்கள் தின நல் வாழ்த்துக்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.