திருச்சியில் சாலைகளில் திரியும் விலங்குகளுக்கு 2 மாதங்களில் ரூ.4.5லட்சம் அபராதம் வசூல்.ஆனாலும் திருந்தாத உரிமையாளர்கள்.
திருச்சி மாநகரில் சாலையில்
திரிந்த கால்நடைகளுக்கு
ரூ. 4.50 லட்சம்
அபராதம் வசூலாகியுள்ளது.
திருச்சி மாநகராட்சியில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்த வகையில் ரூ. 4.50 வரை வசூலிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சியில், போக்குவரத்து இடையூறாக, சாலைகளில், வீதிகளில் மற்றும் பொது இடங்களில் ஆடுகள், மாடுகள், குதிரைகள் உள்ளிட்ட வாகனங்கள் திரிந்து கொண்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் நிலை அதிகரித்து வருகிறது.
இது குறித்த புகார்கள் அதிகரித்த நிலையில், சாலைகளில் திரியும் விலங்குகளை மாநகராட்சி சார்பில் பிடித்து (பறிமுதல் செய்யப்பட்டு) உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை, கடந்த செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்தது. பிடிக்கப்படும் கால்நடைகள் லாரிகளில் ஏற்றி, மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வளாகத்தில் அடைக்கப்படும். பின்னர் அவற்றுக்கு அபராதம் செலுத்தி விலங்குகளை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என்ற நடைமுறை கடந்த இரு மாதங்களாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பிடிக்கப்படும் கால்நடைகள் உறையூர் கோணக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி விலங்குகள் பாதுகாப்பு வளாகத்தில் பாதுகாப்பாக அடைத்து வைக்கப்படுகின்றன. செப்டெம்பர், அக்டோபர் இரு மாதங்களில் திருச்சி மாநகரில் சாலைகளில் திரிந்த வகையில் சுமார் 120 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு மாடுகளுக்கு தலா ரூ. 5000, கன்றுகளுக்கு அளவுக்கு ஏற்ற வகையில் ரூ. 1000 முதல் 2,500 வரையில் அபராதம் விதிக்கப்படுகின்றன.
இதுவரை 4.50 அபராதம் விதித்தாலும் இன்றைய நாள் வரை சாலைகளில் தெரியும் விலங்குகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
விலங்குகளின் உரிமையாளர்கள் தினமும் வந்து தங்களது மாடுகள் மாடுகள் சரியாக உள்ளதா என குறிப்பாக கலெக்டர் அலுவலக சாலையில் கும்பலாக திரியும் தங்களது மாடுகள் சரியாக உள்ளதா என உரிமையாளர்கள் சரி பார்த்து செல்கின்றனர்.
காலையில் ஜேம்ஸ் பள்ளி, வாசவி வித்யாலயா பள்ளி குழந்தைகள் சொல்லும் சாலையில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் காளை மாடுகள் தாராளமாக நடந்து செல்கின்றன.
இதில் பிடிபடும் விலங்குகளை முதியோர், ஆதரவற்ற விதவைகள், கைம்பெண்கள் உள்ளிட்டோர் வளர்க்கும் விலங்குகளுக்கு அபராதத் தொகையில் தளர்வு வேறு.அனைவருக்கும் ஒரே அபராதம் தொகை விதித்தால் சாலைகளில் திரியும் விலங்குகளை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
இதுவரையில் சுமார் ரூ. 4.50 லட்சம் வரை அபராதம் வசூலாகியுள்ளதாக திருச்சி மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். விலங்குகளை பிடிக்கவும், பாதுகாப்பாக அவற்றை கொண்டு சென்று அடைத்து வைக்கவும் தொழிலாளர்கள் மற்றும் லாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல கால்நடைகள் அடைத்து வைத்துள்ள இடத்திலும் திருட்டு போகாமல் தடுக்கும் வகையில் காவலர்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.