திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்சி நகர் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரி இவரது மகள் பவானி (16) சையது முதுஷா மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் அடிக்கடி செல்போனில் தொடர்ந்து பல மணி நேரம் பேசி வருவதை பார்த்த காளீஸ்வரி பவானியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதனால் நேற்று முன்தினம் பேனா வாங்குவதற்காக பக்கத்தில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பவானி விட்டு திரும்பவில்லை.
உறவினர்கள் மற்றும் தோழிகள் வீட்டில் தேடியும் இதுவரை எந்த தகவலும் இல்லாததால்,
காளீஸ்வரி இது குறித்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தால்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை எடமலைப்பட்டி புதூர் போலீசார் தேடி வருகின்றனர்.