திருச்சி மாநகராட்சி 24-வது வார்டில் நகர பகுதி சபா கூட்டம் காங்கிரஸ் கவுன்சிலர் சோபியா விமலா ராணி தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி
24- வது வார்டில் நகர பகுதி சபா கூட்டம்.
காங்கிரஸ் கவுன்சிலர் சோபியா விமலா ராணி தலைமையில் நடந்தது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நகர சபா கூட்டங்களை தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளிலும் நகர சபா கூட்டங்கள் நடந்தது.
இதன் தொடர்ச்சியாக திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்டம் 24-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சோபியா விமலா ராணி தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி
பில் கலெக்டர் சரவணன், அலுவலர் சோபியா
கிளாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படை பிரச்சனைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து பேசினர். இதில் பொது மக்களின் கருத்துக்களை தனியாக ஊழியர்கள் பதிவு செய்தனர்.
நிகழ்ச்சியில் நகர சபா கூட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பலன்கள் தொடர்பாக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் என்ஜினீயர் பேட்ரிக் ராஜ்குமார் விளக்கி பேசினார்.
இந்த கூட்டம் சுமார் 2 மணி நேரம் இக்கூட்டம் நடைபெற்றது.