திருச்சி 22 வது வார்டில் நகர பகுதி சபா கூட்டம்.மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
மாநகராட்சி மண்டலம் 5-க்கு உட்பட்ட
திருச்சி 22-வது வார்டில் நகர பகுதி சபா கூட்டம்.
மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்தது.
உள்ளாட்சி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் முதல் முறையாக நகர பகுதி சபா கூட்டங்கள் நடந்தது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளிலும் மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் தலைமையில் நகர பகுதி சபா கூட்டங்கள் நடந்தது.
இதே போல்
திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் மண்டலம் 5-க்கு உட்பட்ட 22 வது வார்டு கிராமசபை கூட்டம் மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தும், மனுவாகவும் அளித்தனர்.
இதற்கு மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையர் (பொறுப்பு) ராஜேஷ்கண்ணா, சுகாதார அலுவலர் இளங்கோ, உதவி பொறியாளர் ரமேஷ், ஆகியோர் பொதுமக்களுக்கு உரிய பதில் அளித்தனர்.இந்த கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.