Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு போலீஸ் பார்வை மாத இதழ் சார்பில் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி நடைபெற்றது.

0

'- Advertisement -

திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் காந்தி ஜெயந்தி விழாவினை முன்னிட்டு போலீஸ் பார்வை மாத இதழ், ஏரோஸ்கட்டோபால் அசோசியேஷன், கோடக் மகேந்திரா பேங்க் சார்பில் பள்ளி மாணவர்களின் தமிழ் ஆற்றலை வளர்க்கச் செய்யும், நாட்டுப்பற்றை வளர்க்கும் விதமாக மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடைபெற்றது.

இப்போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துக்கொண்டனர்.

Suresh

காலை முதல் நடைபெற்ற இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

போலீஸ் பார்வை மாத இதழின் ஆசிரியர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அன்பு திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் வடக்கு,
அஜய் தங்கம் திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் (கண்டோன்மென்ட் சரகம்),ஜோசப் நிக்சன் திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் (போக்குவரத்து),
சுந்தரமூர்த்தி திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் (கோட்டை சரகம்) , அறிவழகன்
துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) திருவரம்பூர், அஜீம் காவல் ஆய்வாளர் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு திருச்சி மாநகரம், சிவக்குமார் காவல் ஆய்வாளர் கண்டோன்மென்ட் திருச்சி மாநகரம்,
ரமேஷ் காவல் ஆய்வாளர் கண்டோமென்ட் போக்குவரத்து திருச்சி மாநகரம் ,
பாலகிருஷ்ணன்
காவல் ஆய்வாளர் எ.புதூர் திருச்சி மாநகரம் , ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர்.


மேலும் நிகழ்ச்சியில் தலைமை நிருபர் ராகேஷ் சுப்ரமணியன், கௌரவ ஆசிரியர் புலவர் தியாகசாந்தான், முதன்மை ஆசிரியர் சிவக்குமார், தலைமை நிருபர்கள் சகாயராஜ், வேல்முருகன்,சிறப்பு நிருபர் பாண்டியராஜன், நிருபர்கள் சிவபிரகாசம் மணிகண்டன், குணசேகரன் ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்,

மேலும் மாணவர்களின் பெற்றோர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.