Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஹீலியம் வாய்வை நானே ரெடி செய்தேன் திருச்சி பலூன் வியாபாரி பகிர் வாக்குமூலம்.

0

'- Advertisement -

ஹீலியம் வாயு தயாரிக்க ஹைதராபாத்தில் கத்துக்கிடேன்.. நானே கேஸ் ரெடி பண்ணுவேன் -பலூன் வியாபாரி சொன்ன பகீர் வாக்கு முலம்.

திருச்சி தெப்பக்குளம் அருகே பிரபல ஜவுளிக் கடை முன்பு, நேற்றிரவு ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து, சின்னதாராபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் (எ) மாட்டு ரவி (வயது 35) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஐவுளி வாங்க வந்த, கீழ அம்பிகாபுரத்தை சேர்ந்த ஜீவானந்தம் (13) என்ற சிறுவன் படுகாயமடைந்து, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மொத்தமாக காயமடைந்த, 21 பேர் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் வெளிப்புற நோயாளிகளாக சிசிச்சை பெற்று, 15 பேர் வீடு திரும்பிய நிலையில், 6 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

ஜவுளி எடுக்க வந்த தஞ்சையை சேர்ந்த ஒரு தம்பதிகளின் ஆறு மாத குழந்தை, இன்று காலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
ஒரு ஆட்டோ மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

சிலிண்டர் வெடித்த இடத்தில், தடயவியல் துறை ஏடிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் தடயங்களை சேகரித்தனர்.

அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்திய, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பலூன் வியாபாரி அனார்சிங் (வயது 31) என்பவர் மீது கோட்டை போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Suresh

சம்பவம் குறித்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அளித்த தகவலில்….

பலூன் விற்பனை செய்தவர் தப்பித்து ஓடிவிட்டார். அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்த ஜீவானந்தம் என்ற சிறுவன் மட்டும் மிக மோசமான நிலையில் உள்ளார்.அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஹீலியம் சிலிண்டர் வைத்து பலூன்கள் விற்பனை செய்ய கூடாது.அப்படி விற்பனை செய்ய அனுமதி பெற வேண்டும். ஹீலியம் நிரப்பப்படும் மையங்கள் எத்தனை இருக்கின்றது. எங்கெங்கெல்லாம் இது போன்று விற்பனை செய்து வருகிறார்கள். என்ற தகவலை பெற்று தர உத்தரவிட்டு உள்ளேன் என்றார்.மேலும் அனுமதியில்லாமல் பயன்படுத்துவோரிடம் இருந்து பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்ய வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.முதல் தகவல் அறிக்கையின் படி, உயர் அழுத்தம் கொண்டு அந்த சிலிண்டரில் வாயு நிரப்பப்பட்டுள்ளது. 5 கிலோ கொள்ளளவை விட அதிகமாகவும், அதிக அழுத்தத்திலும் ஹீலியம் வாயு சிலிண்டரில் நிரப்பப்பட்டுள்ளது. அதுவே வெடிக்க காரணமாக இருந்துள்ளது” என்றார்.

வடமாநில பலூன் வியாபாரியான அனார் சிங்கை கோட்டை போலீசார் கைது செய்து விசாரித்தபோது,

“கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பே திருச்சிக்கு வந்து விட்ட அனார் சிங், தனது குடும்பத்துடன் பழைய மதுரை சாலை வள்ளுவர் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.தமிழகத்தில், கோயில் திருவிழாக்கள், மிகப் பெரிய விசேஷங்கள் நடக்கும் இடங்களுக்கு சென்று பலூன் விற்பதே இவரது வேலை. ஊரெல்லாம் சுற்றிவிட்டு, கடந்த, 15 நாட்களுக்கு முன்புதான் திருச்சி வந்துள்ளார்.

செயற்கை கற்களை கொண்டு ஹீலியம் வாயு தயாரிப்பதை ஹைதராபாத்தில் இருந்தபோது கற்றுக் கொண்டது தெரிய வந்துள்ளது. தன்னிடம் உள்ள பழைய சிலிண்டரில் கசிவு இருந்திருக்கலாம். சிலிண்டர் அருகே யாராவது தீக்குச்சி பற்ற வைத்ததாலோ, பீடி, சிகரெட் குடித்ததாலோ சிலிண்டர் வெடித்திருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

வாயுக்களில் ஹீலியம் வாயு பொருத்தவரை மிகவும் லேசான வாயுவாக கருதப்படுகிறது. ஆஸ்துமா முற்றிய நோயாளிகள் நேரடியாக ஆக்ஸிஜன் கொடுத்தாலும் கூட மூச்சு விடுவதற்கு சிரமப்படுவார்கள். அப்போது அவர்களுக்கு ஆக்சிஜன் உடன் ஹீலியம் வாயும் சேர்த்து செலுத்தும்போது எளிதாக சுவாசிப்பார்கள்.’கார்டியாக் அரெஸ்ட்’ எனப்படும் மாரடைப்பு ஏற்படும் போது, மூளையை பாதிக்காமல் இருக்க, அந்நோயாளிகளுக்கு ஹீலியம் வாயு செலுத்தப்படுகிறது.

மேலும், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் போது உடல் முழுவதும் உள்ளே இருப்பதால், ஸ்கேன் எடுப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்கவும், ஸ்கேன் தெளிவாக இருக்க குளிர்விப்பான் ஆகவும் ஹீலியம் வாயு பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.