Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை திருச்சி திமுக தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம். மகேஷ் பொய்யாமொழி அறிக்கை.

0

'- Advertisement -

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்.
மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.

திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை 28.10.2022 மாலை 6 மணிக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

Suresh

இதில் நவம்பர் 4ஆம் தேதி திருச்சிக்கு வருகை தரும் தமிழக முதல்வர் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்தும் மற்றும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் திருச்சி தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சம்பந்தமாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில,மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள், மாநகர கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் .

என திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.