சர்வதேச கை கழுவும் தினம்:
திருச்சியில் பள்ளி மாணவிகள் உறுதி மொழி.
திருச்சி பொன்மலைப்பட்டி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச கைகழுவும் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி கடந்த ஒரு வாரமாக மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைபோட்டி, ஓவியப்போட்டி போன்ற போட்டிகளும், விழிப்புணர்வு ஊர்வலமும் நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக நேற்று காலை வழிபாட்டு கூட்டத்தில் மாணவிகளுக்கு கை கழுவுவதன் அவசியம் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் ஆசிரியைகள் எடுத்துரைத்தனர். மேலும் எவ்வாறு கையை சுத்தமாக கழுவ வேண்டும் என்பது பற்றி மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.