திருச்சி குட்செட் மேம்பாலம் இறக்கத்தில் உள்ள பாரில் நேற்று லண்டன் குடியுரிமை பெற்ற தமிழர் ஒருவரை அடித்து கொன்றனர்.
இதற்கு காரணம் அந்த பார் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவது தான்.. காலை 6 மணி முதல் டாஸ்மாக் கடை திறக்கும் முன்பே பாரில் அமர்ந்து அவர்கள் அங்கு மது அருந்த ஆரம்பித்ததாகவும், பத்தரை மணி அளவில் ஏற்பட்ட முடுக்குப்பட்டி தர்மன், உலகநாதபுரம் சரவணன், தீடீரநகர் பிரசன்னா ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க வந்த செல்வம் என அழைக்கப்படும் சின்னதுரையை தர்மன். சரவணன் இருவரும் தாக்கியதில் படுகாயம் அடைந்தார் சின்னதுரை.அந்த நேரம் பாரில் இல்லாததால் தாக்கிய மூன்று பேரும் தப்பி ஓடி விட்டனர் சின்னதுரையை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் அனுமதிக்க யாரும் முன் வரவில்லை.நீண்ட நேரம் ரத்தம் வெளியேறியதாலும், தாமதமாக ஆஸ்பத்திரியில் அனுமதித்ததின் காரணமாகவும் சின்னதுரை பரிதாபமாக உயிரிழந்தார்.
(கொலை செய்யப்பட்ட சின்னதுரை)
இந்த பாரில் மது அருந்திவிட்டு சில இளைஞர்கள் அடிக்கடி அடித்துக் கொள்வதும்,
பாலத்தில் வரும் வாகனத்தை கவனிக்காமல் சாலையை கடக்க முயற்சித்து அப்பாவி பொதுமக்கள் விபத்தில் சிக்குவதும் வழக்கமான ஒன்றாகும்.
இதனால் இந்த பாரை மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில் ( உடல்கூறுஆய்வு முடிந்து கொலை செய்யப்பட்டவரின் உடல் வீட்டுக்கு கொண்டு செல்லும் முன்பே) இன்றும் வழக்கமாக அரசு மதுபான கடை, மற்றும் கொலை நடந்த பார் இரண்டும் திறந்து வைக்கப்பட்டு வெகுஜூராக வியாபாரம் நடைபெற்று வருகிறது ….
நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சித்தலைவர் அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பு ?