நர்சின் கணவர்
தூக்கு மாட்டி தற்கொலை .
திருச்சி திருவானைக்காவல் நடு கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராகவன் (வயது 32) இவருக்கு திருமணம் ஆகி வெண்ணிலா என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் ராகவன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். வெண்ணிலா திருச்சியில் உள்ள ஒரு கிளினிக்கில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று வெண்ணிலா வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த ராகவன் திடீரென்று அறைக்கு சென்று சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மனைவி வெண்ணிலா ஸ்ரீவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.