எடப்பாடி கைது செய்ததை கண்டித்து புறநகர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் சாலை மறியல். 200க்கும் மேற்பட்டோர் கைது.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி கைதை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் தலைமையில் அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
அப்போது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் ப.குமார், முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.எம்.பாலன், அவைத்தலைவர் அருணகிரி ஒன்றிய செயலாளர்கள் சூப்பர் நடேசன், டி.என்.சிவக்குமார், அசோகன், ராஜாராம், பொன்னி சேகர், எஸ்.கே.டி.கார்த்திக் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர் .
இதனால் லால்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.