Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கோவையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்டவிழிப்புணர்வு கழகத்தின் ஐம்பெரும் விழா.

0

 

கோவையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் ஜம்பெரும் விழா அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தலைவர் ஆர். கே. குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொள்ள வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்கள் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் எம். கற்பகவிநாயகம் மற்றும் மாநில மனித உரிமைகள் அனையத்தின் தலைவர் மற்றும் நீதிபதிகளையும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் அகில இந்திய பொது செயலாளர் முனைவர் சுப்பிரமணியம் வரவேற்றார் .

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய கொளரவ தலைவருமான நீதியரசர் எம். கற்பகவிநாயகம் தலைமையேற்று மனிதநேயம் மற்றும் மனித உரிமைகள் என்கிற தலைப்பிலும், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதியரசர் எஸ். பாஸ்கரன் மனித உரிமைகள் என்கிற தலைப்பிலும், நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும் அமர்வு நீதிபதியுமான நீதிபதி பாலசந்திரன் நுகர்வோர் உரிமை என்கிற தலைப்பிலும், முன்னாள் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி வைத்தியநாதன் மனிதநேயம் என்கிற தலைப்பிலும், முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி .முகமது ஜீயாபுதின் மனித உரிமைகள் என்கிற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.

மூத்த வழக்கறிஞரும் முன்னாள் சிபிஐ அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் மாநில தலைவருமான வழக்கறிஞர் சுந்தரவடிவேலு நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார் அமைப்பின் மாநில மகளிர் அணி தலைவியும் குருதி கொடையாளருமான லதா அர்ஜுனன் அமைப்பின் கொளரவ தலைவர் டாக்டர் ஆர். ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வழக்கறிஞர் சங்க நிர்வாகியும் மூத்த வழக்கறிஞர் தேன்மொழி பெண்கள் எப்படி தைரியமாக இருக்க வேண்டும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தயங்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அவர் நீதிபதிகளின் மனித நேய தீர்ப்புகள் குறித்து விளக்கி பேசினார்.

நிகழ்ச்சியில் கலை ஆலையம் நாட்டியாஞ்சலி மற்றும் புஷ்பாஞ்சலி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைப்பின் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு புத்தகம் சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட்டது, தொடர்ந்து சிறந்த சமூக பணிகளை செய்து வரும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கு பாராட்டு சான்றும் கேடயமும் நீதியரசர் எம். கற்பகவிநாயகம் திருச்சி மாவட்ட நிர்வாகிகளிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் செயலாளர் நாகராஜன், மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா. இணை செயலர் அல்லி கொடி, அனுஷ்கா. நந்தினி, விளையாட்டு பிரிவு செயலர் சுரேஷ் பாபு, இணைச் செயலாளர் அறிவராஜன், மைக்கேல் இயன் ஜோசப் அஷ்வின் ரயின் ஜோன் ராஜாமகேந்திரன் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ.தாமஸ் உள்ளிட்டோர் பெற்று கொண்டனர் நிகழ்ச்சியில் திருச்சி உணவு திருவிழா குறும்பட போட்டியில் முதல் பரிசை பெற்ற என் கடமை உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மேலும் தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் நடத்தப்படும் குறும்பட போட்டி மற்றும் பல்வேறு குறும்பட போட்டிகளில் கலந்து கொண்டு உள்ள அச்சம் தவிர் பயணிகள் கணிவான கவனத்திற்கு என்கிற விழிப்புணர்வு குறும்படங்களும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்படத்தினை பார்த்த சிறப்பு விருந்தினர்கள் படகுழுனரை வெகுவாக பாராட்டி படகுழுவினருக்கு பாராட்டு சான்று மற்றும் கேடயம் வழங்கினர். இந்நிகழ்வில் படத்தின் இயக்குனர் குமார் தங்கவேல் ஒளிப்பதிவாளர் யாசின் இசையமைப்பாளர்கள் பாலகுமார் , மைக்கேல் கிருஷ்ணகுமார் புரொடக்ஷன் மேனேஜர் செந்தில் குமரன் திரைப்பட மற்றும் குறும்பட நடிகை வென்மதி, விஜயகுமாரி. அனிதா, ஷீபா , மாரியம்மாள், மீனா,பீயூளா சுப்புலட்சுமி நடிகர்கள் கந்தசாமி, ஆரோக்கியசாமி, வேலுசாமி, அங்கமுத்து சி..எஸ். சந்திரன், வெங்கடேஷ்குமார், பழனிச்சாமி, சுருள் ராமசாமி. ஜெகன் முத்து ஏ. டி. ஆர் முருகன் அசோக் குமார் முத்துபாண்டி யோகராஜ் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிர்வாகிகள் மூத்த வழக்கறிஞர் சுந்தர பாலன் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் RTO ஓய்வு கிருஷ்ணசாமி, காவல்துறை உதவி ஆணையர் (ஓய்வு) கே.ராமசந்திரன், வழக்கறிஞர் தமிழ் செல்வி, வழக்கறிஞர் சந்தோஷ், வழக்கறிஞர் பிரபு சங்கர். இணைசெயலர் சித்ரகலா மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்

தமிழகம் முழுவதும் மரங்களை வெட்டாமல் மறு நடவு பணிகளை செய்து வருது மரங்களுக்கு மறுவாழ்வு அமைப்பின் நிர்வாகி சையது அவர்களின் பணிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது

நிகழ்ச்சியினை ஆசிரியர் புவனேஸ்வரி தொகுத்து வழங்கினார் நிகழ்வின் முடிவில் அமைப்பின் நிறுவனர் தலைவர் ஆர். கே. குமார் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.