
திருச்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின்
எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற அரசால் தடை
செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள்
மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கெள்ளும் வகையில், திருச்சி மாநகர
காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, அனைத்து சரக உதவி ஆணையர்கள்
மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து இன்று கண்டோன்மெண்ட், ஜயப்பன் கோவில் அருகில், உமாசங்கரி தனிப்படையுடன் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது, சந்தேகத்தின் பேரில் புத்தூர்,
வி.என்.பி. தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகன் ஜெயராமன் (வயது 33) என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது,
அவரிடமிருந்த அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களான ஹான்ஸ், சைனி, விமல், கணேஷ், கூல்லிப், ஆர்.எம்.டி பான்பராக் போன்ற குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக TN 45 CB 5618 என்ற இருசக்கர வாகனத்தில் மூட்டைகளில் கடத்திய வந்தவரை பிடித்து, சுமார் ரூ.2,00,000/- இலட்சம் மதிப்புள்ள, ஹான்ஸ் – 6 மூட்டைகள், விமல்பாக்கு – 12 மூட்டைகள், கூல்லிப் – 2 மூட்டைகள் மற்றும் RMD பான்பராக் – 20 பாக்ஸ் ஆகிய குட்கா பொருள்களை பறிமுதல் செய்தும், குட்கா பொருள்களையும், கடத்த பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தும், மேற்படி நபரை கைது செய்தும், வழக்குப்பதிவு செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேற்கண்ட நபரை வாகன தணிக்கையின் போது பிடித்த தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்கள்.
மேலும் திருச்சி மாநகரத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா பொருள்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

