திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தில் டொயோட்டாவின் முற்றிலும் புதிய வாகனமான யூசி ஹை ரைடர் (UC-HyRyder) காரினை ஸ்ரீரங்கம் காவல்துறை உதவி ஆணையர் நிவேதா லஷ்மி அறிமுகப்படுத்தி முதல் வாகனத்தை வாங்கிய வாடிக்கையாளருக்கு சாவியினை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனத்தின் சிஇஒ வெங்கடேசன், கிளை மேலாளர் ஆன்டனி ராஜ் மற்றும் நிர்வாக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.