திருச்சியில் பண பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர் கைது.
திருச்சி
மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் கத்தியை காட்டி மிரட்டியதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் புதுக்கோட்டை பொன்னமராவதி பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி(வயது 37) என்பவரை,தில்லை நகர் வாமடம் சப்பானி கோவில் தெருவை சேர்ந்த வீரப்பன் என்கிற ராஜ்குமார்(வயது 22) தென்னூர் மந்தை அருகே நின்று கொண்டிருந்தபோது அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 2000 ரூபாய் பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து 2000 ரூபாய் பணம் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர் மீது ஏற்கனவே 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் லால்குடி பெருவளநல்லூர் கீழ உடையார் தெருவை சேர்ந்தவர் பீர்முகமது (வயது 43) இவர் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார் .நேற்று முன் தினம் காஜா பேட்டை
ஏஎம்கே கம்பெனி அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பீமநகர் கூனி பஜாரை சேர்ந்த கார்த்திக்(வயது23) கீழப்புதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயராமன்(வயது19) என்ற இருவரும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பீர் முகமது பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைது செய்ய ப்பட்ட இருவர் மீது வழக்குகள் உள்ளது. மேலும் அவர்களிடமிருந்து ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் திருவெறும்பூர் சூரியூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நேற்று முன் தினம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகம் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த முடுக்குப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 2000 ரூபாய் பணத்தை படித்துச் சென்றார். இது குறித்து அவர் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையின் விளக்க பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அவர் மீது 8 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது அவரிடம் இருந்து ஒரு கத்தி மற்றும் 200 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பஞ்சகரை சாலை பகுதி சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவர் கடந்த ஐந்தாம் தேதி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஸ்ரீ அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஸ்ரீரங்கம் பனையபுரம் காலனி தெருவை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து 750 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளார். இது குறித்து அவர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாண்டியராஜன் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து ஒரு கத்தி மற்றும் 250 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.