திருச்சி விமான நிலையத்தில் டாக்ஸி வே விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.விமான நிலைய இயக்குனர் பொன்.சுப்பிரமணி
திருச்சி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள
டாக்சி வே விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
விமான நிலைய இயக்குநர் பேட்டி.
திருச்சி விமான நிலையத்தின் இயக்குநராக இருந்த எஸ். தர்மராஜ் சென்னைக்கு பணி மாறுதலில் சென்றார்.
இதனையடுத்து பொன்.சுப்பிரமணி திருச்சி நிலைய இயக்குநராக கடந்த செப்டெம்பர் 22 ஆம் தேதி பொறுப்பேற்ற அவர் நேற்று செய்தியளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியது:-
திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. 2023 ஆண்டு ஜூன் மாதத்துக்கள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய விமான நிலைய கட்டுப்பாட்டு அறையும் (ஏடிசி டவர்) அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நவீன தொழிநுட்பத்துடன் கூடிதாக 45 மீட்டர் உயரத்தில் அந்த புதிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். தொடர்ந்து ஓடுதள (ரன்வே) விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருன்றன.
திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பாகவும், மகிழ்வாகவும் பயணிக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பயணிகளால்தான் விமான நிலையத்துக்கு வருவாய் கிடைக்கின்றன என்பதால் பயணிகள் நலனில் அக்கரை செலுத்தப்படும். அவர்கள் விமானத்தில் இறங்கி நிலையத்தை விட்டு வெளியே செல்லும் வரையில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஒரு குறையுமின்றி பாதுகாப்புடன் செய்து தரப்படும். சுங்கத்துறை அலுவலர்களின் நடவடிக்கைகள் பயணிகளை அதிருப்திக்கு உள்ளாக்குவதாக வந்துள்ள தகவல்கள் குறித்தும் சுங்கத்துறையினரிடம் பேசி சீராக்கப்படும்.
மேலும் இங்கு வெளிநாட்டு கரன்சிகளை முறைகேடாக விநியோகிப்பதாகவும் அவற்றுக்குப் பதிலாக இந்திய ரூபாய் தாள்களை வழங்கவது குறித்தும், தகவல்கள் வந்துள்ளன. அது குறித்து, காவல் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். விமான நிலையத்தில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடத்தில் (பார்கிங்) கார்கள் மற்றும் வாகனங்களை நிறுத்தும்போது, பல்வேறு வகையிலான பிரச்னைகள் எழுவதாக கூறப்படுகிறது. அவை குறித்து விசாரித்து யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பாதிப்புக்குப் பின்னர் சுமார் 90 சதவிகித விமானங்கள் இயக்கப்படுகின்றன. அக்டோபர் 29 ஆம் தேதியுடன் கோடைகால அட்டவனை முடிந்து அடுத்ததாக குளிர்கால அட்டவனை வெளியிடப்படவுள்ளது. இதில் கூடுதல் விமானங்களை இயக்குவது குறித்து திட்டமிடப்பட்டு வருகின்றன. இது குறித்து உறுதி செய்யததும் தகவல் தெரிவிக்கப்படும். விமான நிலையத்தில் சேகரமாகும் மட்கும் மற்றும் மட்காத குப்பைகளை அகற்ற மாநகராட்சியுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குப்பைகளை மறு சுழற்சிசெய்யும் மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் தாற்காலிகமாக இந்த ஏற்பாடு என்றார் அவர்.
டாக்சி வே பற்றி சில விபரங்கள் பார்ப்போம்:
டாக்சி வே என்பது ஓடுதளத்துக்கு இணையாக அதன் அருகிலேயே அமைக்கப்படும் அணுகுசாலையைப் போன்றது. 3,891 அடி நீளத்துக்கு அமைக்கப்பட உள்ளது.அதாவது தரையிறங்கும் விமானம் இறங்கியதும் இந்த அணுகு சாலை வழியாக விமான நிறுத்துமிடத்துக்கு கொண்டு வரப்படும். அப்போது ஓடுதளம் (ரன் வே) காலியாக இருக்கும் எனவே, அதில் மேலும் விமானங்களை தரையிறக்கவும்,. புறப்பட்டுச் செல்லவும் அனுமதிக்கப்பட்டு விமானப் போக்குவரத்து தடையின்றி நடைபெறும். இந்த டாக்சி வே அதிகளவில் விமானப் போக்குவரத்து நடைபெறும் பிசியான விமான நிலையங்களில் மட்டும்தான் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.