எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு:
திருச்சியில் அதிமுகவினர் கொண்டாட்டம்.
ஜெ.சீனிவாசன் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
சென்னையில் ஜூலை 11-ந் தேதி எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பினர் கூட்டிய அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி கே. பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு தொடர்ந்தார். இதில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பில்
ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக் குழு செல்லும் என தீர்ப்பு கூறப்பட்டது.
இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஸ்ரீரங்கத்தில் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் பகுதி செயலாளர்கள் சுந்தர்ராஜ், டைமன்ட் திருப்பதி, ஒன்றிய செயலாளர் எஸ். பி.முத்து கருப்பன்,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவக்குமார், வக்கீல் வெங்கடேசன், ஸ்ரீரங்கம் ரவிசங்கர், இ.பி.ஏகாம்பரம், ரங்கராஜ்,மருதை, கலைமணி, செந்தில் பிரகாஷ் உள்பட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்பியுமான டி. ரத்தினவேல் மன்னார்புரம் நான்கு ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் கலைவாணன், இன்ஜினியர் டி.ஆர். சுரேஷ்குமார், முத்துலட்சுமி, கமலஹாசன், வசந்தகுமார், வெங்கடாசலம் ,மல்லிகா, கருமண்டபம் முத்துக்குமார் சிங்காரவேலன், பாலு மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஜெ. சீனிவாசன் திருச்சி கோர்ட் அருகாமையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினார். இதில் பகுதி செயலாளர்கள் முஸ்தபா, ,
அன்பழகன் சுரேஷ் குப்தா , ஏர்போர்ட் விஜி, மற்றும் சகாதேவ் பாண்டியன், என்ஜினியர் ரமேஷ்,நாட்டாண்மை சண்முகம், ஜெகதீசன்,ரோஜர் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆவின் சேர்மனும், மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளரும், கார்த்திகேயன் ஏற்பாட்டில் மாவட்ட அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் நாகநாதர் பாண்டி, ஏர்போர்ட் விஜி, கலைவாணன், மாவட்ட நிர்வாகிகள் கருமண்டபம் நடராஜன், தென்னூர் அப்பாஸ், என்.டி. மலையப்பன், எடத்தெரு பாபு,குருமூர்த்தி ஒத்தக்கடை மணிகண்டன், வி.பி.எஸ்.மகாதேவன், ராஜ்மோகன், மாணவரணி குமார், பேரவை ராஜசேகர், கார்த்திக், எஸ்.என்.சத்தியமூர்த்தி, கிருஷ்ணன், கீதா ராமனாதன், பெரியண்ணன், வண்ணாரப்பேட்டை ராஜன், சிராஜுதீன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் குமார் ஏற்பாட்டின் பேரில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.