திருச்சி உறையூர் கடைவீதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பாஜக செயற்குழு உறுப்பினர் தினகர் ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம்.
திருச்சி உறையூர் கடைவீதி சின்ன சௌராஷ்ட்ரா தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவிலில் 25 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு
கடந்த இரண்டு நாட்களாக 12 அடி உயர விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
கடைசி நாளான இன்று அப்பகுதி பொதுமக்கள் சுமார் 2000 க்கும் மேற்பட்டோருக்கு மாபெரும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியினை பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் G.D.தினகர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.
அன்னதான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் ராஜசேகரன்,சூர்யா சிவா,பாலாஜி சிவராஜ்,காளீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வை பட்டாசு கண்ணன், பெல்ட் சீனி,ரமேஷ், மோகன் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.