அக்டோபர் 2-ந் தேதி
திருச்சியில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடை.
போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவு.
திருச்சி மாநகரில் செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 9-ஆம் தேதி வரை ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், போன்றவை நடத்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தடை விதித்திருந்தார்.
இந்தநிலையில் அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள காந்தி சிலையிலிருந்து ஊர்வலம் செல்ல அனுமதி அளிக்க வேண்டுமென ஆர். எஸ்.எஸ்.அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். இந்த நிலையில் அந்த ஊர்வலம் நடந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே பி. எப் .ஐ அமைப்பு தலைவிதிக்கப்பட்டிருப்பதால் அந்த அமைப்பை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
.இந்த சூழலில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்கக்கூடிய நிலை ஏற்படும். எனவே ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.