Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று.பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும் மாவட்ட ஆட்சி தலைவர்.

0

'- Advertisement -

 

திருச்சி மாவட்ட ஆட்சியர்.வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகடந்த ஆண்டை விட 50 சதவீதம் கூடுதலாக பதிவேடு ஆகி இருக்கிறது.

H1N1 SWINE FLU VIRUS, தொற்று காய்ச்சல் சிறு பிள்ளைகளுக்கு அதிகமாய் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சிறுபிள்ளைகளிடமிருந்து பெரியோர்களுக்கும் அதிகமாக பரவி வருகிறது. மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் இது இன்னும் அதிவேகமாக பரவ வாய்ப்பு உள்ளதால் அனைவரும் முக கவசம் அணிய அறிவுறுத்தப்படுகின்றனர்.

தொண்டை வலி, உடல் வலி,அதிக காய்ச்சல், ஜலதோஷம்,தும்மல், இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு மற்றவர்களுக்கும் இந்த வைரஸ் பரவாமல் உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கூடவே கொரோனா தொற்றும் அதிகரித்து வருகிறது, ஒரு நாளைக்கு நான்கு ஐந்து என இருந்த கொரோனா தொற்று தற்போது தினசரி 18க்கு மேல் பதிவாகி வருகிறது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் நம்முடைய அலட்சியம் தான்.

கொரோனா நம்மை விட்டு முற்றிலும் அகன்று போகிவிட்டது எனவே யாரும் முக கவசம் அணிய வேண்டாம், தனிநபர் இடைவெளி கடைபிடிக்க வேண்டாம் என்று இதுவரை எந்த ஒரு அரசாங்க ஆணையும் வரவில்லை.
ஆனால் மக்களாகிய நாம் நாமாக முடிவெடுத்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறோம் என்று சொல்லி சுகாதாரம் இல்லாமல்,சுத்தம் இல்லாமல், பராமரிப்பு இல்லாமல், முக கவசம் அணியாமல் அதிக கூட்டம் உள்ள இடங்களுக்கு சென்று கொரோனாவை பரப்பியும் விடுகிறோம்.நாமும் பெற்றுக் கொள்கிறோம்.

இன்னும் கொரோனா நோய் தொற்றுக்கு நிரந்தர மருந்து இல்லாத காரணத்தால் இன்னும் நோயாளிகள் இறந்து கொண்டிருப்பதால் தயவுசெய்து உயிர் இழப்புகளை தவிர்க்க, சேதங்களை தவிர்க்க மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நம்முடைய குடும்ப நலன் கருதி, நம்முடைய சமுதாய நலன் கருதி கொரோனாவை முற்றிலும் அழித்திட தனிமனித இடைவெளி கடைபிடிக்குமாறும், முக கவசம் அணியும் படியும், அடிக்கடி சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து கொள்ளவும் உங்களை அன்போடு இந்த மாவட்ட நிர்வாகம் கைகூப்பி கேட்டுக்கொள்கிறது.

நம்மிடமிருந்து முதியோர்களுக்கு பரவும் போது முதியோர்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் கம்மியாக இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.
எனவே நாம் சுயநலமாக இல்லாமல் நம்மால் நம் குடும்பத்தில் உள்ள யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்ற ஒரு குடும்ப நலம் கருதும் நபராய் இருந்து தனிமனித இடைவெளி மற்றும் கூட்டம் அதிகமா இருக்கும் இடங்களுக்கு முற்றிலும் செல்வதை தவிர்த்து முக கவசம் அணிந்து நமக்கு வராமலும் நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க நாம் உதவுவோம்.

அதிகப்படியான காய்ச்சல் இருமல் தும்மல் உள்ள பிள்ளைகள் உடல்நிலை சரியாகும் வரை பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து தேவையான சிகிச்சை பெற்றுக் கொண்டு பள்ளிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதனால் நம்மிடமிருந்து மற்ற பிள்ளைகளுக்கு பரவுவதை நாம் தவிர்க்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.