திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் – 3க்குட்பட்ட 13 வார்டு பகுதிகளை சேர்ந்த மாநகராட்சி தொடர்பான மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் மக்களைத் தேடி மாநகராட்சி முகாம் காட்டூர் கைலாஷ் நகர் சந்தோஷ் மஹாலில் இன்று நடைபெறறது.
முகாமில் பொதுமக்களின் மனுக்களை மேயர்மு. அன்பழகன் பெற்றுக்கொண்டார்.
பின்னர் பயனாளிகளுக்கு கட்டிட அனுமதி சொத்து வரி, பெயர் மாற்றம், பிறப்புச் சான்றிதழ். இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டலக்குழுத் தலைவர் மு. ,மதிவாணன், நகரப் பொறியாளர் சிவபாதம், துணை ஆணையர் எம். தயாநிதி, மாமன்ற உறுப்பினார்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.