Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஊர் காவல் படை காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 27 ஆம் தேதி.திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித் குமார் தகவல்

0

'- Advertisement -

 

திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் 37 காலிப்பணியிடங்கள்
10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு.திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித் குமார் தகவல்.

திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் 37 வீரர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 35 ஆண்களுக்கும், 2 பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டவை ஆகும். தற்போது இந்த 37 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி அடைந்தவர்கள் அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

20 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் 165 செ.மீட்டரும், பெண்கள் 155 செ.மீட்டரும் உயரம் உடையவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் திருச்சி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறிப்பாக எந்த ஒரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்கக்கூடாது. மேலும் விளையாட்டு வீரர் மற்றும் பேண்ட் வாத்தியம் இசைக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை மற்றும் உடற்தகுதி தேர்வில் தளர்வு வழங்கப்படும்.

விருப்பம் உடைய விண்ணப்பதாரர்கள் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று, உரிய சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது ரூ.5 தபால்தலை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட உறையுடன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஊர்க்காவல் படை அலுவலகம், சுப்பிரமணியபுரம், ஆயுதப்படை வளாகம், திருச்சி 620020 என்ற முகவரிக்கு வருகிற 27-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.