திருச்சிராப்பள்ளி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் (மாநில தடகள சங்கத்துடன் இனைய பெற்றது)
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ஸ்டேட் பேங்க் லேட் எஸ்.மோகன் நினைவு சுழல் கோப்பை இளையோருக்கான தடகளப் போட்டிகள் இன்று காலை தொடங்கியது.
கமாண்டர் ஆஃப் போலீஸ் ஆனந்தன் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
தனியார் பயிற்சி மையங்கள் மற்றும் பள்ளியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திரளாக போட்டிகளில் பங்கேற்றனர்.
இன்றும் நாளையும் நடைபெறும் போட்டிகளில் தகுதி பெரும் வீராங்கனைகள் திருவண்ணாமலையில் செப்டம்பர் மாதம் 13 14 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறும் மாநில போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
அப்போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் தகுதியின் அடிப்படையில் தேசியப் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
நாளை மாலை 5 மணி அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு முக்கிய பிரமுகர்களும் .தடகள வீரர்களும் தடகள சங்க நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.
இப்போ போட்டிகளை திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜு ,மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தனர்.