Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வீரசேகரன் தலைமையில் எஸ்.ஆர்.எம்.யூ வினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

 

Ad banner

எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தினர் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தின் சார்பில் பொன்மலை கோட்டை செயலாளரும்,துணைப் பொதுச் செயலாளருமான வீரசேகரன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்
7லட்சம் ரயில்வே தொழிலாளர்களையும், அதிகாரிகளையும் சுமார் 10 சதவீதம் குறைத்து 3வருடத்தில் பணிநீக்கம் செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும், மேலும்
50வயது அல்லது
30வருட பணி நிறைவு என்ற அடிப்படையிலும் தொழிலாளிகளையும் அதிகாரிகளையும் பணியில் இருந்து வெளியேற்ற நினைக்கும் திட்டத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ரயில்வே தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும், ரயில்வே கட்டண உயர்வை கைவிட்டு, பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.