திருக்கோவிலிகளில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களை பணியாளர்கள் செய்ய தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் கோரிக்கை.
திருக்கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஐ.நா. சபையால்
உலக முடி திருத்துவோர் தினமாக அங்கீகரிக்கப்பட்ட செப்டம்பர் 16-ந் தேதியை
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் சங்க ஸ்ரீரங்கம் மாநகர சங்கம் சார்பில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு
தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி சங்க கொடியை ஏற்றினார்.
துணைத்தலைவர் சுரேஷ் வரவேற்றார்.
செயலாளர் ராஜலிங்கம் இளைஞர் அணி செயலாளர் மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில்,
மருத்துவர் சமூக மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் உள்ள ஒதுக்கீடு 5 சதவீதம் வழங்க வேண்டும்.
சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். திருக்கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
முடி திருத்தும் கடைகளுக்கு மின்சாரம் அரசு மானியமாக வழங்கிட வேண்டும்.
சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் தபால் தலை வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் பிரபாகரன் ,துணைச் செயலாளர் ஜீவரத்தினம், இளைஞர் அணி துணைச் செயலாளர் ரகுராமன், இளைஞர் அணி அமைப்பாளர்கள் மனோகரன் , சின்னராஜா, ரமேஷ், மோகனகுமார், நிர்மல் ,பார்த்திபன், சரவணன், மணிகண்ட சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில்
பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.