
திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் ராஜா காலனி எதிரில் மத்திய பேருந்து செல்லும் பாதையில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்பதற்காக திருச்சி மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பாக பேரிகார்ட் அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனியார் பேருந்து ஒன்று பேரிகார்டில் மோதி விபத்து ஏற்படுத்தியது.இதில் பேரிகார்ட் உடைந்து சாலையில் சரிந்தது.
இந்த சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் முக்கிய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சென்று வந்தும் சரிந்த பேரி கார்டை இதுவரை சரி செய்யப்படாதது வருத்தம் அளிக்கிறது என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய கோரிக்கையும் வைத்துள்ளனர்.

