
திருச்சி எஸ்.பி தலைமையில்
தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில்
7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்.
திருச்சி போலீஸ் எஸ்பி தலைமையில் தனிப்படை போலீசார் இன்று நடத்திய அதிரடி வேட்டையில் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையிலான தனிப்படையினர் இன்று வளநாடு காவல் நிலையம் பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது பாலன் என்பவரது வீட்டில் சுமார் 43 மூட்டைகள் குட்கா ஹான்ஸ் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து எடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சட்டவிரோதமாக ஹான்ஸ் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த பாலன் என்பவரது வங்கி கணக்குகளை முடக்கம் செய்யவும், அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவிட்டுள்ளார்.

