ஸ்ரீரங்கம் விக்னேஷ் ஸ்ரீரெங்கா பள்ளி விளையாட்டு விழா .
ஸ்ரீரங்கம் விக்னேஷ் ஸ்ரீரெங்கா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
விக்னேஷ் கல்விக் குழும அறக்கட்டளை தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். இந்திய வாலிபால் கழக இணை செயலாளர் நடராஜன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினார்.
பள்ளி சேர்மன் கோபிநாதன், அறங்காவலர் லட்சுமிபிரபா முன்னிலை வகித்தனர்.
பள்ளி இயக்குனர் வரதராஜன், ஆலோசகர் மலர்விழி, முதல்வர் விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர் .
இவ்விளையாட்டு விழாவினை உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.

