வ.உ.சி யின் 151 வது பிறந்தநாள்:அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள வ.உ. சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், துணை ஒருங்கிணைப்பாளருமான கு.ப. கிருஷ்ணன்,திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர். ராஜ்மோகன், மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ ரத்தினவேல், வடக்கு மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு, தாயார் சீனிவாசன், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, ராமச்சந்திரன்,
கணேசன், சந்துக்கடை, சந்துரு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

