
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 89- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அலுவலகத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் முரசொலி மாறன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன்,முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, பரணிக்குமார்
கவுன்சிலர்கள் முத்துச்செல்வம் நாகராஜன்,
ராமதாஸ்,விஜயா ஜெயராஜ், கலைச்செல்வி,
பகுதி செயலாளர்கள்,டாக்டர் சுப்பையா பாண்டியன் மற்றும் நிர்வாகிகள்,திமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.