Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆற்று மணல் ரீச்சை மூட களம் இறங்க உள்ள கமலஹாசன். திருச்சி தெற்கு மநீம ஆலோசனை கூட்டத்தில் முடிவு.

0

'- Advertisement -

 

திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட கலந்து ஆலோசனைக் கூட்டம்.

மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனை மாநிலச் செயலாளர் சிவ.இளங்கோ அவர்களின் தலைமையில், மாநிலச் செயலாளர் (பொறியாளர் அணி) டாக்டர்.
வைத்தீஸ்வரன், மாநில இணைச் செயலாளர் ஆ.ஜெய்கணேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் ஆகியோர் முன்னிலையில்

திருச்சி தென்மேற்கு மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீரங்கம் GSRK திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் லால்குடி உத்தர்சீலி ஆற்று மணல் ரீச்சை உடனடியாக தமிழக அரசு மூடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்படி மணல் குவாரியை மூடவேண்டி வரும் நாட்களில் உத்தமர்சீலி அல்லது இடையாற்றுமங்கல கிராமத்தில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கலந்துகொள்ளவது என தீர்மானிக்கப்பட்டது.

இந்நநிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் நாகவேல், பொருளாளர் கருப்பையா, ,மாவட்ட துணை செயலாளர் பாலசுப்ரமணியன், லால்குடி ஒன்றிய செயலாளர் இளையராஜா உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.