தமிழகம் முழுவதும் நவம்பர் 5ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.அரசு அலுவலக உதவியாளர்கள், பணியாளர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்.
கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் .
அரசு அலுவலக உதவியாளர்கள், பணியாளர்கள் சங்க பொதுக் குழுவில் தீர்மானம்.
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் மதுரம் தலைமையில் திருச்சியில் இன்று நடந்தது. முன்னதாக மாநில தலைவராக மதுரம், மாநில பொதுச் செயலாளராக நடராஜன், மாநில பொருளாளராக முனியப்பன் மற்றும் அனைத்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பொதுக்குழு கூட்டத்தில் அகில இந்திய தலைவர் கணேசன் சிறப்புரையாற்றினார். மாநில முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மத்திய அரசு அறிவித்தவுடன் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு அகவிலைப்படியினை உடனுக்குடன் வழங்கிட வேண்டும் .
அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள “டி” பிரிவு பணியிடங்களை நிரப்பிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும்.
டி பிரிவு பணியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது 62 ஆக மாற்றிட வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
75 வது பவள விழாவையொட்டி வருகின்ற அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநாடு நடத்துவது,
மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைப்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
மேலும் தமிழக அரசு டி பிரிவு பணியாளர்களின் கோரிக்கைகள்,
தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் வருகின்ற நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.