Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்.திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டால் மேயர் அன்பழகன் ஆவேசம்.

0

'- Advertisement -

 

இது திமுக ஆட்சியா ?அதிகாரிகள் ஆட்சியா?
கவுன்சிலர்கள் குற்றச்சாட்டால் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் ஆவேசம்.

திருச்சி
மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது இந்த கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு;-

விடுதலை சிறுத்தை கவுன்சிலர் வி சி கே பிரபாகரன்;-
எங்கள் வார்டுக்கு உட்பட்ட ஈ.பி. ரோடு பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பிரசவத்துக்கு செல்லும் தாய்மார்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆகவே போதிய டாக்டர்களை நியமித்து அங்கேயே பிரசவம் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகர்நல அலுவலர்;-
அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஜவகர் காங்கிரஸ்;-
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் பாத்ரூம் வசதி இல்லை. வெளியில் இருக்கும் கழிவறைகள் சுத்தமாக இல்லை. ஆகவே கோவிலுக்கு வெளியே பக்தர்களுக்கு வசதியாக கூடுதல் கழிவறை மற்றும் பாத்ரூம் வசதிகள் செய்திட வேண்டும்.
மேயர் அன்பழகன்
உடனடியாக பக்தர்களுக்கு வசதியாக புதிய பாத்ரூம்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

லீலா வேலு திமுக;-
திருச்சி மாநகராட்சியில் மண்டல வாரியாக 11 ஸ்ட்ரைகிங் போர்ஸ் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் எனது வாடில் எட்டு பேர் மட்டுமே வேலைக்கு வந்தார்கள். ஆனால் 11 பேர் கையெழுத்துட்டு இருப்பதாகத் தெரிகிறது. அப்படி என்றால் அந்த மூன்று பேர் எங்கே சென்றார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
மேயர் அன்பழகன்;-
எல்லோரும் மனிதர்கள் தான். உடல் நலக்குறைவால் கூட பணிக்கு வராமல் இருந்திருக்கலாம்.
இனிமேல் ஒவ்வொரு வார்டுகளிலும் ஒரு நாள் மாஸ் கிளீனிங் செய்வதற்கு தற்போதைய தூய்மை பணியாளர்கள் மற்றும் ஸ்ட்ரைக்கிங் போர்ஸ் நபர்களுடன் திட்டமிட இருக்கின்றோம்..
மேற்கண்ட விவாதம் நடந்தபோது அதிகாரிகள் தரப்பில் ஒருவர் மேற்கண்ட மண்டலத்தில் ஸ்ட்ரைக் கிங் போர்சில் ஒன்பது பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னொருவர் 11 பேர் நியமிக்கப்பட்டு அதில் ஒன்பது பேர் பணிக்கு வந்ததாகவும் மாறுபட்ட கருத்தினை பதிவு செய்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

செந்தில் பஞ்சநாதன் ;-
மாநகராட்சி ஆணையாளர் அதிகாலை 5 அரை மணிக்கு சாலைகளில் உள்ள குப்பைகளை சுத்தப்படுத்த தூய்மை பணியாளர்களை கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த பணிகள் காலை 9 மணி 10 மணி வரை நீடிக்கிறது. அதன் பின்னர் வீடுகளுக்கு குப்பைகளை சேகரிக்க செல்கிறார்கள். அப்போது வீட்டில் இருக்கும் மக்கள் வேலைக்கு சென்று விடுகிறார்கள். பின்னர் மாலையில் மீண்டும் அதே குப்பை சாலைக்கு வந்துவிடுகிறது. ஆகவே முதலில் வீடுகளில் இருக்கும் குப்பையை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துச்செல்வம் (தி.மு.க.)
மாநகராட்சியில் சர்வேயர் இல்லாத காரணத்தால் பணிகள் தேக்கம் அடைந்துள்ளன. அதேபோன்று மழைக்காலத்துக்கு முன்பாக வடிகால்களை தூர்வார டெண்டர் விடப்பட்டது.3 வார்டுகளுக்கு சேர்த்து ரூ. 11 லட்சத்தில் டெண்டர் விடப்பட்டது. ஆனால் எங்கள் பகுதியில் ஒப்பந்ததாரர் வந்து பார்த்துவிட்டு சென்றதோடு சரி. அதன் பின் வந்து பார்க்கவே இல்லை.

முத்துக்குமார் (தி.மு.க)
பாதாள சாக்கடை பணிகளால் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.
மேயர் அன்பழகன்
உங்கள் பகுதியில் நான் கூட வந்து பார்த்தேன். தவறான தகவல் சொல்லக்கூடாது. தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்று எப்படி சொல்கிறீர்கள் என ஆவேசமடைந்தார்..

இதை எடுத்து திமுக கவுன்சில முத்து செல்வம் எழுந்து,
இங்கு திமுக ஆட்சி நடக்கிறதா அதிகாரிகள் ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது. பணிகளில் வெளிப்படை தன்மை வேண்டும். எங்கள் வாடில் நடக்கும் பணிகள் எங்களுக்கே தெரியவில்லை. அரசாணைகளை தமிழில் வெளியிட வேண்டும்.
காங்கிரஸ் கவுன்சிலர் ஜவகர் திமுக கவுன்சிலர் ராமதாஸ் ஆகியோர் பேசும்போது, திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் அமைக்கப்பட்ட சிவாஜி சிலையை உடனே திறக்க வேண்டும்.
மேயர் அன்பழகன்
கோர்ட்டில் வழக்கு இருக்கிறது என்றார்.
அதற்கு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் நாங்கள் பார்த்த போது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என கவுன்சிலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பைல்ஸ் அகமது
தென்னூர் மெயின் ரோடு பாதி அளவு சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சாலையையும் உடனே சீரமைக்க வேண்டும் என கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.