சுதந்திர தினத்தை முன்னிட்டு செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ரோலர் ஸ்கேட்டிங் பேரணி.
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், போதைப்பொருள் ஒழிப்போம் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில், மாணவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் அணிந்து கொண்டு பேரணியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

திருச்சியில் செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தேசிய அளவில் ஏரோஸ்கெட்டோபால் விளையாட்டில் வெற்றி பெற்ற முப்பதுக்கு அதிகமான ஸ்கேட்டிங் மாணவர்கள், அகாடமியின் பொறுப்பாளர்கள், ராகேஷ் , சுப்பிரமணியன் மற்றும் பிரவீன்ஜான்சன் இவர்களின் தலைமையில் திருச்சி தீரன் நகரில் இருந்து சாந்திவனம் ஆதரவற்றோர் இல்லம் வரை சுமார் 15 கிலோமீட்டர் வரையில் ரோலர் ஸ்கேட்டிங் அணிந்து கொண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் ஒழிப்போம் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஸ்கேட்டிங் சென்றனர்.
தமிழ்நாடு காவல்துறையினர் பாதுகாப்புடன், மாணவர்களின் பெற்றோர்கள் பங்களிப்புடன் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்போம் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணியும் சிறப்பாக நடைபெற்றது,
டாக்டர். பாலகிருஷ்ணன் ஸ்கேட்டிங் பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார்,
நிகழ்ச்சியின் இறுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட, ஆதரவற்றோர் வாழும் சாந்திவனம் இல்லத்திற்கு சென்று அங்குள்ள 130 க்கும் அதிகமான நபர்களுக்கு இரவு உணவு அளித்து
செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் ஸ்கேட்டிங் மாணவர்கள், பெற்றோர்களுடன் இணைந்து தங்களது 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.