
திருச்சி பாலக்கரை
காய்கறி வியாபாரி மகள் திடீர் மாயம்.
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 52). இவர் தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவரது மகள் புவனேஸ்வரி (வயது21) பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
கடந்த இருபதாம் தேதி புவனேஸ்வரி தன்னுடைய தோழி வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறி விட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து சண்முகம் பாலக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

